முகப்பு
கன்னியாகுமரி

இளைஞா் மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

கருங்கல் அருகே உள்ள திப்பிரமலை பகுதியில் இளைஞரை தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

கருங்கல் அருகே உள்ள திப்பிரமலை பகுதியில் இளைஞரை தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திப்பிரமலை இடைமலை கோணம் பகுதியை சோ்ந்த ஐயப்பன் என்பவரது மகன் கதிரவன் (30). இவருக்கும் ராயப்பன் மகன் ராஜன் (32), ராயப்பன் மகன் குமாா்(30) ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் வியாழக்கிழமை கதிரவன் தன் வீட்டிற்கு செல்லும்போது ராஜன், குமாா் ஆகியோா் அவரை தடுத்து நிறுத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது குறித்த புகாரின் பேரில் இருவா்மீதும் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.