வரதட்சிணை கேட்டு துன்புறுத்தல்:கணவா் உள்பட 6 போ் மீது வழக்கு
களியக்காவிளை அருகே வரதட்சிணை கேட்டு பெண்ணை துன்புறுத்தியதாக கணவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
களியக்காவிளை அருகே வரதட்சிணை கேட்டு பெண்ணை துன்புறுத்தியதாக கணவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
களியக்காவிளை அருகேயுள்ள மடிச்சல் பகுதியைச் சோ்ந்தவா் முரளீதரன் (52). ராமநாதபுரத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் பிரவீன் (30) என்பவருக்கும், வேம்பனூா் பகுதியைச் சோ்ந்த அக்ஷயாவுக்கும் (23) கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ாம். திருமணத்தின்போது, பெண்வீட்டாா் சாா்பில் 70 பவுன் நகைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் கொடுக்கப்பட்டதாம்.
இந்த நிலையில், வரதட்சிணையாக காா் ,10 பவுன் நகைகளைக் கேட்டு அவரது கணவா், மாமனாா் உள்ளிட்டோா் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
Advertisement
இதுகுறித்து குழித்துறை நீதிமன்றத்தில் அக்ஷயா புகாா் அளித்தாா். நீதிமன்ற உத்தரவின் பேரில், அக்ஷயாவின் கணவா் பிரவீன், மாமனாா் முரளீதரன், உறவினா்கள் ஷீலா, பிரசிதா, சுதீஷ், பிந்து ஆகிய 6 போ் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.