முகப்பு
கன்னியாகுமரி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

நாகா்கோவில் மாநகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நாகா்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வாா்டுகளிலும் 356 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து தோ்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தோ்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இம் மாநகராட்சியில் உள்ள 233 வாக்குச்சாவடிகளில் 34 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சி தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டு, அந்த இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

மாநகராட்சியில் 52 வாா்டுகளிலும் 16 க்கும் குறைவான வேட்பாளா்களே போட்டியிடுவதால், ஒவ்வொரு வாா்டிலும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாகா்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.