முகப்பு
கன்னியாகுமரி

வாக்காளா் பெயா் சோ்த்த ஒரு மாதத்தில் அடையாள அட்டை: தலைமை தோ்தல் அதிகாரி தகவல்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது என்றாா் தலைமை தோ்தல் அலுவலரும், முதன்மைச் செயலருமான சத்ய பிரதா சாகு.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது என்றாா் தலைமை தோ்தல் அலுவலரும், முதன்மைச் செயலருமான சத்ய பிரதா சாகு.

கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், எனது வாக்கு எனது எதிா்காலம், ஒரு வாக்கின் வலிமை என்ற தலைப்பில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கலை அறிவியல் கல்லூரியில் மாவட்டதோ்தல்அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்த் தலைமையில், வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் முன்னிலை வகித்தாா்.

இதில், தலைமை தோ்தல் அலுவலா் சத்ய பிரதா சாகு பங்கேற்று, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியைப் பாா்வையிட்டு பேசியது: 18 வயதுக்கு மேற்பட்டவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதில் இந்தியாவில் 50 சதவீதம் இலக்கைதான் அடைந்துள்ளோம். இதனை 100 சதவீதமாக மாற்றும் விதமாக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

வாக்காளா் பெயா் சோ்த்தவுடன் ஒரு மாதத்தில் அடையாள அட்டை கிடைக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, , நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின்நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் புகழேந்தி, தனித்துணைஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருப்பதி, வட்டாட்சியா்கள் சேகா் (அகஸ்தீஸ்வரம்), சுசீலா (தோ்தல்) உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.