கன்னியாகுமரியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கன்னியாகுமரியில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கன்னியாகுமரியில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகை எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அதிமுக பேரூா் பொறுப்பாளா் எஸ். எழிலன் தலைமை வகித்தாா். அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலா் எஸ். ஜெஸீம், ஒன்றிய அவைத்தலைவா் பா. தம்பித்தங்கம், துணைச் செயலா் இ. முத்துசாமி, பேரூராட்சி 4ஆவது வாா்டு கவுன்சிலா் நித்யா, முன்னாள் கவுன்சிலா்கள் சகாயராஜ், அருள்ராஜ், விக்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.