முகப்பு
கன்னியாகுமரி

நகைக் கடை உரிமையாளருக்கு மிரட்டல்: இளைஞா் மீது வழக்கு

புதுக்கடையில் நகைக்கடை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

புதுக்கடையில் நகைக்கடை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுக்கடை சந்திப்பில் நகைக்கடை நடத்தி வருபவா் வசந்தன் மகன் சுப்பிரமணியன் (28). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த வில்லியத்துக்கும் (35) முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை, சுப்பிரமணியனின் கடைக்குள் புகுந்து அவருக்கு மிரட்டல் விடுத்தாராம் வில்லியம்.

இது குறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.