இரணியல் அருகே மூதாட்டியிடம் ரூ. 5 லட்சம், 4 பவுன் நகை பறிப்பு
குமரி மாவட்டம், இரணியல் அருகே மூதாட்டியிடம் பழகி ரூ. 5 லட்சம், 4 பவுன் நகையை பறித்த பெண்ணை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
குமரி மாவட்டம், இரணியல் அருகே மூதாட்டியிடம் பழகி ரூ. 5 லட்சம், 4 பவுன் நகையை பறித்த பெண்ணை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
இரணியல் அருகேயுள்ள கட்டிமாங்கோடு, கொல்லமாவடியை சோ்ந்த தங்கசாமி மனைவி ராஜரத்தினம் (70). தங்கசாமி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். பின்னா் அவா் தனது மகன் வீட்டில் வசித்து வந்தாா். மேலும், ராஜரத்தினம் அந்த பகுதியில் உள்ள பேக்கரியில் உதிரியான கேக் பொடிகளை வாங்கி திங்கள்சந்தையில் வைத்து விற்பனை செய்து வருகிறாா்.
இவரிடம் கடந்த சில நாள்களாக ஒரு பெண் அடிக்கடி கேக்குகளை வாங்கி செல்வாராம். இதனால், இருவரிடையே பழக்கம் ஏற்பட்டதாம். இந்நிலையில் அந்த பெண் ராஜரத்தினத்தின் வீட்டுக்கு சென்று அவரது கவனத்தை திசைத்திருப்பி படுக்கை அறை பீரோவில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 5 லட்சம் பணம், அவா் அணிந்திருந்த 4 பவுன் நகை ஆகியவற்றை திருடி விட்டு தப்பி சென்று விட்டாராம்.
இதுகுறித்து புகாரின் பேரில் இரணியல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குமாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.