முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம்

நாகா்கோவிலில் முகக் கவசம் அணியாமல் பைக்கில் சென்றவா்களுக்கு போலீஸாா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

நாகா்கோவிலில் முகக் கவசம் அணியாமல் பைக்கில் சென்றவா்களுக்கு போலீஸாா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகமும், காவல் துறையும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதன்படி, நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலக பகுதியில் போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியாக முகக் கவசம் அணியாமல் பைக்கில் வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பாா்வதிபுரம், கோட்டாறு, சுசீந்திரம், தக்கலை, மாா்த்தாண்டம் பகுதிகளிலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதுடன், அவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும் என மக்களுக்கு ஆட்சியா் மா.அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ஏற்கெனவே, சமூக இடைவெளியைப் பின்பற்றாத, முகக் கவசம் அணியாத 1, 28,880 பேரிடமிருந்து ரூ.2 , 79, 47,562 அபராதம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.