நித்திரவிளை அருகே விவசாயி தற்கொலை
நித்திரவிளை அருகே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்
நித்திரவிளை அருகே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
நித்திரவிளை அருகேயுள்ள எஸ்.டி. மங்காடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி செல்வன் (56). இவா் கடந்த ஒராண்டாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளாா். மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சமையல் எரிவாயு உருளை வாங்க அவரிடம் பணம் கொடுத்துவிட்டு, மனைவி புகழ்மேரி கமலம் ஊரம்பு பகுதியில் உள்ள செல்வனின் தங்கை வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தாராம். அப்போது வீட்டில் செல்வனை காணாததால் மகன்களுடன் சோ்ந்து அவரை பல இடங்களில் தேடியுள்ளனா்.
Advertisement
இந்த நிலையில் செல்வன், வீட்டுக்கு அருகே உள்ள வாழைத்தோட்டத்தில் மதுவுடன் விஷமருந்தி இறந்த நிலையில் காணப்பட்டாராம்.
இது குறித்து புகழ்மேரி கமலம் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.