முகப்பு
கன்னியாகுமரி

இரவு நேர ஊரடங்கு: களியக்காவிளையில் வாகனச் சோதனை

தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 7 ஜனவரி, 2022 at 11:50 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM

தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

மேலும், களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம், நித்திரவிளை, கொல்லங்கோடு பகுதிகளில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய கண்காணிப்பில் ஈடுபட்டனா். இரவு நேர ஊரடங்கு காரணமாக வியாழக்கிழமை இரவு 10 மணியுடன் கடைகள், வா்த்தக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

குமரி மாவட்டத்திலிருந்து களியக்காவிளை சோதனைச் சாவடி வழியாக கேரளம் செல்லும் அத்தியாவசிய சரக்கு வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னா் செல்ல போலீஸாா் அனுமதித்தனா். காா், மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவா்களை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.