கருங்கல்லில் பொங்கல் விழா
கருங்கல்லில் உள்ள கிள்ளியூா் பேரவைத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கருங்கல்லில் உள்ள கிள்ளியூா் பேரவைத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். பேரூா் காங்கிரஸ் தலைவா் குமரேசன் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இதில், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ்
தலைவா் பினுலால்சிங், மாநில பொதுக்குழு உறுப்பினா் டைட்டஸ், குமரி மேற்குமாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஷா்மிளா ஏஞ்சல், வட்டார நிா்வாகிகள் குமாரவேல் மணி, மரிய அருள்தாஸ், சதீஷ்குமாா், ஜஸ்டின் உள்பட பலா் பங்கேற்றனா்.