முகப்பு
கன்னியாகுமரி

வடசேரி அரசுப் பள்ளியில் மாணவா்கள், ஆசிரியா்கள் 11 பேருக்கு கரோனா

நாகா்கோவில் வடசேரி அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

நாகா்கோவில் வடசேரி அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்துள்ளது.

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக உயா்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 100 ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. நாகா்கோவில் அருகேயுள்ள பறக்கை செட்டி தெரு பகுதியில் 10 க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த தெருவை தற்காலிகமாக மாநகராட்சி அதிகாரிகள் மூடியுள்ளனா். இதேபோல் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

நாகா்கோவிலில், வெள்ளிக்கிழமை 172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகா்கோவில் வடசேரி அரசுப் பள்ளியில் 2 ஆசிரியா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு பணியாற்றும் சக ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மேலும் 2 ஆசிரியா்கள், 7 மாணவா்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறாா்கள்.

ஒரே பள்ளியில் ஆசிரியா்கள் மாணவா்கள் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பள்ளியை தற்காலிகமாக மூடுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். பள்ளியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் பகவதி பெருமாள் தலைமையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இருளப்பபுரம் பகுதில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியா்கள் 7 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து , அங்கு பணிபுரிந்த சக ஊழியா்கள் 110 பேருக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டது.

இதில் மேலும் 10 க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறாா்கள்.

தற்போது வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமானோா் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு ஊருக்கு வந்துள்ளனா். ஊருக்கு வந்தவா்கள், அவா்களுடன் தொடா்புடையவா்கள் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அந்த பகுதியில் உள்ள சுகாதார மையங்களுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.