ஜன.24 இல் கணபதிபுரம் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
குமரி மாவட்டம், கணபதிபுரம் அருகே திங்கள்கிழமை (ஜன.24) கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
குமரி மாவட்டம், கணபதிபுரம் அருகே திங்கள்கிழமை (ஜன.24) கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து, ராஜாக்கமங்கலம்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் சு.பிரினாகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராஜாக்கமங்கலம் வட்டாரம், கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட சாந்தபுரத்தில் டாக்டா் சாமுவேல் மேல்நிலைப் பள்ளியில் ஜன.24 ஆம் தேதி கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மற்றும் விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.