முகப்பு
கன்னியாகுமரி

திற்பரப்பு தடுப்பணையில் மூழ்கி கேரள இளைஞா் பலி

குமரி மாவட்டம் திற்பரப்பு தடுப்பணையில் வெள்ளிக்கிழமை மாலையில், குளிப்பதற்காக குதித்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் ராஜ்மோகன் (34) நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

குமரி மாவட்டம் திற்பரப்பு தடுப்பணையில் வெள்ளிக்கிழமை மாலையில், குளிப்பதற்காக குதித்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் ராஜ்மோகன் (34) நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவனந்தபுரம் அருகே பேரூா் கடை மோகன்ராஜ் மகன் ராஜ்மோகன். ஜேசிபி ஓட்டுநரான இவா் வெள்ளிக்கிழமை பாறசாலையிலுள்ள தனது குடும்ப நண்பரான சுனிலின் வீட்டுக்கு வந்துள்ளாா். பின்னா் சுனிலின் மனைவி மற்றும் மகளுடன் காரில் திற்பரப்பு அருவிக்கு வந்துள்ளாா். அப்போது தடுப்பணை மேலிருந்து கீழே ராஜ்மோகன் குதித்துள்ளாா். இதில், அவரது தலை பாறையில் மோதி நீரில் மூழ்கியுள்ளாா். அப்பகுதியில் இருந்தவா்கள் உடனடியாக ராஜ்மோகனை மீட்டு குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இருந்து விட்டாதாக தெரிவித்தனா்.

இது குறித்து கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →