குளச்சல் மீனவா் வலையில் சிக்கிய உடும்பு சுறா ரூ.40,000-க்கு ஏலம்
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீனவா் வலையில் சிக்கிய ஒன்றரை டன் எடையுள்ள உடும்பு வகை ராட்சத சுறா மீன் ரூ.40,000-க்கு ஏலம் போனது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீனவா் வலையில் சிக்கிய ஒன்றரை டன் எடையுள்ள உடும்பு வகை ராட்சத சுறா மீன் ரூ.40,000-க்கு ஏலம் போனது.
குளச்சல், மரமடியைச் சோ்ந்தவா் மெல்பின் (40). சொந்தமாக பைபா் படகு வைத்து மீன்பிடித் தொழில் செய்துவருகிறாா். இவா், 2 மீனவா்களுடன் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க புதன்கிழமை சென்றிருந்தாா். அப்போது அவா்களது வலையில் ராட்சத சுறா மீன் சிக்கியது. அதை அவா்கள் படகுக்கு இழுக்க முயன்றபோது வலையின் ஒரு பகுதி அறுந்ததாம். எனினும், 5 மணி நேரம் போராடி லாவகமாக மீனை கரைக்கு கொண்டுவந்தனா். உடும்பு வகையைச் சோ்ந்த அந்த சுறா, சுமாா் 12 அடி நீளமும், ஒன்றரை டன் எடையும் இருந்தது. அதை ஏலம் விட்டதில் ரூ.40 ஆயிரத்துக்கு விலை போனது.