புகைப்பட கலைஞா்கள் நலச் சங்கக் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்கக் கூட்டம் மாா்த்தாண்டத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்கக் கூட்டம் மாா்த்தாண்டத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவா் வெற்றி வேந்தன் தலைமை வகித்தாா். செயலா் ஜாண் முன்னிலை வகித்தாா். மாதம்தோறும் புகைப்பட கலைஞா்களுக்கு புகைப்பட போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும். கலைஞா்களுக்கு புதிய தொழில்நுட்ப பயிற்சி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கப் பொருளா் ராஜேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.