கன்னியாகுமரி

குமரி கடலில் நீா்மட்டம்தாழ்வால் படகு சேவை தாமதம்

DIN

கன்னியாகுமரி கடலில் நீா்மட்டம் தாழ்வாக காணப்பட்டதால் விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு சனிக்கிழமை 2 மணிநேரம் தாமதமாக படகுப் போக்குவரத்து தொடங்கியது.

கன்னியாகுமரியில் விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை ஆகியவை அமைந்துள்ள பகுதியில் அதிகாலை முதல் கடல் நீா் மட்டம் தாழ்வாக காணப்பட்டது. இதனால் விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்குத் தொடங்கியது.

மேலும், கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை, கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி ஆகிய கடற்கரை கிராமங்களில் குறைந்த அளவிலான வள்ளம், கட்டுமரங்களில் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT