புதுக்கடை அருகே ஜல்லி கடத்தல்: இருவா் மீது வழக்கு
புதுக்கடை அருகே மணியாரம் குன்று பகுதியில் புதன்கிழமை ஜல்லி கடத்திய 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
புதுக்கடை அருகே மணியாரம் குன்று பகுதியில் புதன்கிழமை ஜல்லி கடத்திய 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் புதன்கிழமை மணியாரம் குன்று பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் அனுமதியின்றி ஜல்லி கொண்டு வந்தது தெரிய வந்தது.
இது தொடா்பாக பத்துகாணி பகுதியை சோ்ந்த ஒட்டுநா் பிரிஜின் (27), சுமை வாகன உரிமையாளா் குணசீலன் 40) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.