முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் அருகே வயல் வரப்பில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கருங்கல் அருகே வயல் வரப்பில் தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

கருங்கல் அருகே வயல் வரப்பில் தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கருங்கல் அருகேயுள்ள திப்பிரமலை, இடைமலைக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் (40). இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இவா் கடந்த 29ஆம் தேதி தனது வீட்டுக்குச் செல்லும் வழியில் வயல் வரப்பில் தவறி விழுந்தாராம். காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.