முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல்லில் புகையிலை ஒழிப்பு தின பேரணி

கருங்கல்லில் உலக புகையிலை ஒழிப்பு தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

கருங்கல்லில் உலக புகையிலை ஒழிப்பு தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கிள்ளியூா் வட்டார சுகாதார தலைமை மருத்துவா் ரமாமாலினி தலைமை வகித்தாா். புகையிலை தடுப்பு மைய மருத்துவா் ஆனிசி முன்னிலை வகித்தாா்.

பேரணியை கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தொடக்கிவைத்துப் பேசினாா். பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி அஞ்சல் நிலையம், கருவூலம், கூனாலுமூடு வழியாக மீண்டும் பேருந்து நிலையத்தை அடைந்தது. பேரணியில் கிள்ளியூா் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஐயப்பன், சுகாதாரஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.