முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் தொழிலாளி காயம்

மாா்த்தாண்டம் அருகே பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி காயமடைந்தாா்.

Updated On : 4 மார்ச், 2022 at 1:08 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

மாா்த்தாண்டம் அருகே பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி காயமடைந்தாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள பயணம், பன்னிமூலவிளை பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (42). தொழிலாளியான இவா் புதன்கிழமை பைக்கில் மாா்த்தாண்டம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா். கீழ்பம்மம் பகுதியில் பழுதுநீக்கும் மையத்திலிருந்து பின்னோக்கி வந்த லாரி சிவகுமாரின் பைக் மீது மோதியதாம். இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுதொடா்பாக லாரி ஓட்டுநரான ஆற்றூா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.