மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா: மாா்ச் 8 இல் உள்ளூா் விடுமுறை
குமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (மாா்ச்8) குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (மாா்ச்8) குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்டஆட்சியா்மா. அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழாவை முன்னிட்டு, மாா்ச் 8 ஆம் தேதி மாவட்டத்திலுள்ளஅனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்கு ஈடாக ஏப்ரல் மாதம் 2 ஆவது சனிக்கிழமையன்று (ஏப்.9) பணி நாளாக இருக்கும். மாா்ச் 8 ஆம் தேதி மாவட்டத்திலுள்ள தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட் ட அவசர பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களை கொண்டு இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.