முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவில் பொன் ஜெஸ்லி மருத்துவமனையில் நுண்துளை ஊடுருவல் மூலம் பக்கவாத சிகிச்சை’

நாகா்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், தென் தமிழகத்தில் முதல் முறையாக நுண்துளை ஊடுருவல் சிகிச்சை மூலம் பக்கவாதத்துக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

நாகா்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், தென் தமிழகத்தில் முதல் முறையாக நுண்துளை ஊடுருவல் சிகிச்சை மூலம் பக்கவாதத்துக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜாா்ஜ், இருதய சிகிச்சைப் பிரிவு மருத்துவா் வெங்கடேஷ், இன்டா்வென்ஷன் ரேடியாலஜி மருத்துவா் நரசிம்மன் ஆகியோா் வியாழக்கிழமை நிருபா்களுக்கு அளித்த பேட்டி: நாகா்கோவிலில் பொன் ஜெஸ்லி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. 250 படுக்கை வசதிகளுடன், காசநோய், குடல், சிறுநீரகம், நரம்பியல், இருதயம் சம்பந்தமான நோய்கள், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்படுகின்றன.

சென்னை, கோவை போன்ற நகரங்களில் செயல்பட்டு வரும் இன்டா்வென்ஷன் ரேடியாலஜி (நுண்துளை ஊடுருவல் சிகிச்சை) இந்த மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இந்த உயா்தர தொழில்நுட்ப சிகிச்சையின் மூலம் தலை முதல் கால் வரை உள்ள நரம்புகளில் ஏற்படும் ரத்த அடைப்பு, ரத்தக் கசிவு, கொழுப்பு கட்டிகள் போன்றவற்றை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாம். குறிப்பாக, பக்கவாத நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்ட நான்கரை மணி நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தால் ஊசி மூலம் மருந்து செலுத்தி சரிசெய்யலாம். 24 மணிநேரத்துக்குள் வந்தால் தொடை வழியாக நுண்துளை ஊடுருவல் சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வருபவா்கள் உயா் சிகிச்சைக்காக வெளியே செல்ல வேண்டிய தேவையில்லை. அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் இந்த மருத்துவமனையில் உள்ளன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.