கருங்கல் அருகே பெண்ணைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு
கருங்கல் அருகே பெண்ணைத் தாக்கியதாக இருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கருங்கல் அருகே பெண்ணைத் தாக்கியதாக இருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கருங்கல் அருகேயுள்ள தெருவுக்கடை, வடலிக்கூட்டம்விளை பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் என்பவரது மனைவி சசிகலா (52). இவருக்கும், இவரது உறவினரான செல்லையன் மகன் சுந்தர்ராஜ் (65), சுந்தர்ராஜ் மகன் ஜெலஸ்டின் (40) ஆகியோருக்கும் இடையே சொத்துத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துவந்ததாம்.
வெள்ளிக்கிழமை சசிகலா தனது தோட்டத்துக்குச் சென்றபோது செ. சுந்தர்ராஜ், ஜெலஸ்டின் ஆகியோா் சோ்ந்து அவரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.