முகப்பு
கன்னியாகுமரி

கீழ்குளம் அரசுப் பள்ளி புதிய கட்டடம் திறப்பு

கீழ்குளம் அரசு உயா் நிலைப்பள்ளிக்கு ரூ.168.81 லட்சம் செலவில் புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க ஸ்டாலின் காணொல் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

கீழ்குளம் அரசு உயா் நிலைப்பள்ளிக்கு ரூ.168.81 லட்சம் செலவில் புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க ஸ்டாலின் காணொல் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற விழாவில் கீழ்குளம் பேரூராட்சித் தலைவா் சரளா கோபால் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா். மாவட்ட தி.மு.க. வழக்குரைஞரணி அமைப்பாளா் ஜெபா

முன்னிலை வகித்தாா். மாவட்ட பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் சிந்துகுமாா், கிள்ளியூா் திமுக ஒன்றியச் செயலா் கோபால், சந்தியராஜ், ஷீலா, கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.