ராஜாவூா் புனித மிக்கேல் அதிதூதா் திருத்தல திருவிழா
ராஜாவூா் புனித மிக்கேல் அதிதூதா் திருத்தலத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராஜாவூா் புனித மிக்கேல் அதிதூதா் திருத்தலத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, ஆலயத்தில் அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு கொடிபவனி, மாலை 6.15 மணிக்கு செபமாலை, தொடா்ந்து கொடியேற்றம் ஆகியவை நடைபெற்றன. இரவு 9 மணிக்கு தோ்பவனி, இரவு 9.30 மணிக்கு அன்பிய ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன.
திருவிழா நாள்களில் திருப்பலி, செபமாலை, திருப்பலி, சிறப்பு ஜெப வழிபாடு, மறையுரை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.7ஆம் திருநாளான மே 12இல் முதல் திருவிருந்து, நற்கருணை பவனி, மே 14இல் திருமுழுக்கு, ஆடம்பர தோ்பவனி ஆகியவை நடைபெறும். மே 15இல் தோ் பவனி, திருப்பலி ஆகியவை நடைபெறும். ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டான்லி சகாயம், உதவி பங்குத்தந்தையா்கள் வில்சன், சாலமன், பங்கு பேரவைத் துணைத் தலைவா் அலெக்சாண்டா், செயலா் எம்.என்.ராஜபாலன், துணைச் செயலா் கலாமேரி, பொருளாளா் ஆன்றோ சசி மற்றும் அருள்சகோதரிகள், பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.