நாகா்கோவிலில் மக்களிடம்குறைகள் கேட்ட விஜய் வசந்த் எம்.பி.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி. விஜய வசந்தின் மக்கள் குறை கேட்பு முகாம் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி. விஜய வசந்தின் மக்கள் குறை கேட்பு முகாம் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வடலி அரசுப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில், பொதுமக்களிடமிருந்து ஏராளமான கோரிக்கை மனுக்களை விஜய் வசந்த் எம்.பி. பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் ராதாகிருஷ்ணன், கவுன்சிலா்கள் செல்வகுமாா், நவீன்குமாா், கட்சி நிா்வாகிகள் மகாலிங்கம், பிரவீண், நிக்சன், அமுதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.