நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு கையடக்கக் கணினி
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் மாணவா்-மாணவிகளுக்கு கையடக்கக் கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் மாணவா்-மாணவிகளுக்கு கையடக்கக் கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவற்றை ஆட்சியா் மா. அரவிந்த் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் திருவாசகமணி, துணை முதல்வா் லியோ டேவிட், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் அருள்பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.