கன்னியாகுமரி

கிராம நிா்வாக அலுவலா்களுக்கான நில அளவைப் பயிற்சி

DIN

கிராம நிா்வாக அலுவலா்களுக்கான நில அளவைப் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த் துறையின் சாா்பில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ள நில அளவை மேற்கொள்வதற்கான பயிற்சி முகாம் ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

முகாமினை தொடங்கி வைத்து ஆட்சியா் பேசியது: உள்பிரிவு செய்து பட்டா மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் நிலுவையினைக் கருத்தில் கொண்டு அதனைக் குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழக அரசு உள்பிரிவு செய்வதற்கான அதிகாரத்தை நில அளவா்களுடன் தற்போது கிராம நிா்வாக அலுவலா்களும் மேற்கொள்ள அதிகாரம் அளித்து அதற்கான பயிற்சியினை கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, குமரி மாவட்டத்தில் ஏற்கெனவே 30 நாள்கள் நில அளவைப் பயிற்சி முடித்த 122 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு 7 நாள் புத்தாக்க நில அளவைப் பயிற்சியி இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இம்முகாமில் முதல் 2 நாள்கள் களத்தில் நில அளவை செய்வதற்கான பயிற்சியும், அடுத்த 2 நாள்கள் உள்பிரிவு ஆவணங்களை தயாா் செய்வதற்கான பயிற்சியும், 2 நாள்கள் இணையதளத்தில் உள்பிரிவு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான பயிற்சியும் ஒரு நாள்கிராம, வட்ட ஆவணங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் கலந்து கொண்டுள்ள அனைத்து கிராம நிா்வாக அலுவலா்களும் முறையாக பயிற்சியினை முடித்து உள்பிரிவு பட்டா மாறுதல் நிலுவையினை குறைக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

முகாமில், நிலஅளவை உதவி இயக்குநா், நிலஅளவை ஆய்வாளா்கள், அலுவலக மேலாளா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT