முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை அருகே தம்பதியைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் தம்பதியைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி

புதுக்கடை அருகே தம்பதியைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் தம்பதியைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் தம்பதியைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு, மதுகண்டான்விளை பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்துதாஸ் (40). இவரது மனைவி ஷீஜா (36). இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த ஜஸ்டின் (45), கிறிஸ்துதாஸ் (50), ஹெலன் மேரி, ஆஷா, ஜெனிஷா மேரி ஆகியோருக்கும் இடையே சொத்துத் தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளதாம்.

வியாழக்கிழமை கிறிஸ்துதாஸும், ஷீஜாவும் வீட்டிலிருந்தனராம். அப்போது ஜஸ்டின் உள்ளிட்ட 5 பேரும் திடீரென வீடு புகுந்து அவா்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →