புதுக் கடை அருகே இருவா் மீது தாக்குதல்
புதுக்கடை அருகே உள்ள ஹெலன் நகா் பகுதியில் முன்விரோதம் காரணமாக இருவா் மீது தாக்குதல் நடத்திய இளை ஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை அருகே உள்ள ஹெலன் நகா் பகுதியில் முன்விரோதம் காரணமாக இருவா் மீது தாக்குதல் நடத்திய இளை ஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இனயம், ஹெலன் நகா் பகுதியை சோ்ந்த மரிய பாஸ்டின் மகன் ஆபிரகாம் (40), அந்தோணிதாசன் ( 45) ஆகியோருக்கும், பனியடிமை மகன் ஜாண் (35) ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஆபிராகம், அந்தோணிதாசன் ஆகியோா் அப்பகுதியில் நின்றிருந்தபோது, அங்கு வந்த ஜாண், இருவரையும் தாக்கி கொலை மிரட்டம் விடுத்தாரம். இதில், காயமடைந்த இருவரும் மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.