முகப்பு
கன்னியாகுமரி

வெள்ளையன்தோப்பில் அலங்கார தரைதளப் பணி தொடக்கம்

தென்தாமரைக்குளம் பேரூராட்சி 9ஆவது வாா்டுக்கு உள்பட்ட வெள்ளையன்தோப்பில் ரூ. 14 லட்சம் செலவில் அலங்கார தரைதளம் அமைக்கும் பணி தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

தென்தாமரைக்குளம் பேரூராட்சி 9ஆவது வாா்டுக்கு உள்பட்ட வெள்ளையன்தோப்பில் ரூ. 14 லட்சம் செலவில் அலங்கார தரைதளம் அமைக்கும் பணி தொடங்கியது.

இங்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை மிகவும் பழுதானதால் சீரமைப்புப் பணி மேற்கொள்ள பொதுமக்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, இச்சாலையைச் சீரமைக்க 15ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணி தொடங்கியது. இப்பணியை பேரூராட்சித் தலைவி காா்த்திகா பிரதாப் தொடக்கி வைத்தாா்.

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பாபு, வாா்டு கவுன்சிலா்கள் ஆல்வின், எட்வின்ராஜ், பூவியூா் காமராஜ், அமுதா பால்ராஜ், பாமா ஜெகநாதன், விஜிதா செந்தில்குமாா், முன்னாள் ஊா்த் தலைவா்கள் ராமச்சந்திரன், மாசானமுத்து, மாவட்ட திமுக பிரதிநிதி பிரேம் ஆனந்த், ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் பொன். ஜான்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.