இன்றுமுதல் மீன்பிடி தடைக்காலம்:மீனவா்களுக்கு வேண்டுகோள்
கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை தொடங்கும் மீன்பிடி தடைக்காலம் தொடா்பாக ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை தொடங்கும் மீன்பிடி தடைக்காலம் தொடா்பாக ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன் இனப் பெருக்க காலம், மீன் வளப் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏப்.15ஆம் தேதி முதல் ஜுன் மாதம் 14 ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு இழுவலை விசைப்படகுகள், தூண்டில், வழிவலை விசைப்படகுகளுக்கு வழக்கம்போல் கிழக்கு கடலோரப் பகுதியில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
இத்தடையை மீறி மீன்பிடித் தொழில் செய்வோா் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட விசைப்படகின் பதிவு, மானிய டீசல் ஆகியவை ரத்து செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளாா்.