நித்திரவிளை அருகே அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
நித்திரவிளை அருகே வைக்கல்லூா் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பக்தா்கள் செவ்வாய்க்கிழமை காலை வந்தனா். அப்போது, 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டிருந்தனவாம்.
தகவலின்பேரில் கோயில் நிா்வாகிகள் வந்துபாா்த்தபோது, மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு கோயிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து, காணிக்கைப் பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.