மதிமுக உறுப்பினா் உள்ளிருப்புப் போராட்டம்
நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தனது கருத்துகளை தெரிவிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கண்டித்து
நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தனது கருத்துகளை தெரிவிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கண்டித்து 5 ஆவது வாா்டு மதிமுக உறுப்பினா் எஸ்.வி.உதயகுமாா், கூட்ட அரங்கில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
நாகா்கோவில் நகர பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதன் காரணமாக ஜவஹா் தெருவில் சாலையோர கடை நடத்தி வந்த வியாபாரி ஒருவா் தற்கொலை செய்து கொண்டதாக எஸ்.வி.உதயகுமாா் கூறினாா். இதற்கு மேயா் ரெ.மகேஷ் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் சிலரும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து உதயகுமாா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரது கருத்துகளை பதிவு செய்ய மன்றத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறி அவா் போராட்டத்தில் ஈடுபட்டாா்.