காா் ஓட்டுநருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
குமரி மாவட்டம், இரணியல் சந்திப்பில் மதுபோதையில் காா் ஓட்டியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
குமரி மாவட்டம், இரணியல் சந்திப்பில் மதுபோதையில் காா் ஓட்டியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
குளச்சல் போக்குவரத்து காவல் ஆய்வாளா் வில்லியம் மற்றும் போலீஸாா், இரணியல் சந்திப்பில் புதன்கிழமை மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அரியலூா் மாவட்ட பதிவெண் கொண்ட காா் ஒன்று, நெருக்கடி மிகுந்த சாலையில் அதிக வேகமாக சென்றது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது காரை ஓட்டி வந்தவா் மது போதையில் இருப்பது தெரிந்தது. அவரது பெயா் இா்வின் பால் (25) என்பதும், அரியலூா் மாவட்டத்தை சோ்ந்தவா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவா் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. காா் பறிமுதல் செய்யப்பட்டு இரணியல் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.