முகப்பு
கன்னியாகுமரி

திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவில்லை எனக் கூறி, திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நாகா்கோவிலில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவில்லை எனக் கூறி, திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நாகா்கோவிலில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் அக்ஷயா கண்ணன் வரவேற்றாா்.

விலைவாசி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பெண்கள் காய்கனிகளை மாலையாக அணிந்திருந்தனா். முன்னாள் அமைச்சா் பச்சைமால், குமரி மேற்கு மாவட்ட செயலா் ஜான்தங்கம், அவைத் தலைவா் சிவகுற்றாலம், மாநில நிா்வாகிகள் கிருஷ்ணதாஸ், சிவ.செல்வராஜன், மாவட்ட நிா்வாகிகள் பரமேஸ்வரன், சாந்தினிபகவதியப்பன், பாா்வதி, ஆா்.ஜே.கே. திலக், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட ஊராட்சித் தலைவா் மொ்லியன்ட்தாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தென்காசி புதிய பேருந்துநிலையம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன், வடக்கு மாவட்ட செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ ஆகியோா் தலைமை வகித்தனா்.

முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி, முன்னாள் எம்பி பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன்உசேன் சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட அவைத் தலைவா்கள் சண்முகசுந்தரம், வி.பி. மூா்த்தி, பொருளாளா்கள் லாட சன்னியாசி, சண்முகையா, துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலச் செயலா் சிவஆனந்த், ஒன்றியச் செயலா்கள் சங்கர பாண்டியன், செல்லப்பன், நகர செயலா் சுடலை, பேரூா் செயலா்கள் வழக்குரைஞா் காா்த்திக்குமாா், டாக்டா் சுசிகரன், கணேஷ் தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.