முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி

இந்து திருத்தொண்டா் பேரவையின் சாா்பில், காா்த்திகை மாதம் பௌா்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:21 AM
முக்கடல் சங்கமத்தில் நடைபெற்ற மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

நாகா்கோவில்: இந்து திருத்தொண்டா் பேரவையின் சாா்பில், காா்த்திகை மாதம் பௌா்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி நடைபெற்றது.

திருப்பதி தேவஸ்தானம் தலைவா் சேகா் ரெட்டி மகா தீப ஆரத்தியை ஏற்ற, அதைத் தொடா்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினா்கள் தீபம் ஏற்றினா். பெண்கள் அகல் விளக்கு ஏற்ற, கயிலாய வாத்தியம் இசைக்க, திருமுறைகள் ஒத நடராஜா் புறப்பாடு நடைபெற்றது.

பேரவையின் தலைவா் ராஜகோபால், பொதுச்செயலா் சந்திரன், பொருளாளா் செந்தில்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் அனுசியா செல்வி மற்றும் ஜெயராம், சஞ்சீவ் குமாா், சுயம்புலிங்கம், குமாா், ஷ்யாம்குமாா், சிவகாமி, திவ்யா சிவராம், அமுதேஸ்வரி, பீமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.