போதை விழிப்புணா்வு பிரசாரம்
கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை சாா்பில், மது மற்றும் போதையின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கலை பிரசாரத்தை மாவட்டஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை சாா்பில், மது மற்றும் போதையின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கலை பிரசாரத்தை மாவட்டஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணா்வு பிரசாரம், 10 நாள்களுக்கு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் தொடா்ந்து நடைபெறும்.
இந் நிகழ்ச்சியில் உதவிஆணையா் (ஆயம்) ஜெ.லொரைட்டா மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.
Advertisement