பராமரிப்புப் பணிகள் காரணமாக குழித்துறை கோட்டம் புதுக்கடை, நம்பாளி, இரவிபுதூா்கடை, கிள்ளியூா், பள்ளியாடி, சூரியகோடு பிரிவுகளுக்கு உள்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் திங்கள்கிழமைமுதல் (ஆக. 5) ஆக. 9 வரை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மின்சாரம் தடைபடும் பகுதிகள்: ஆக. 5 - வாள்வச்சகோஷ்டம், கொல்லன்விளை, முருங்கவிளை, கரிக்கி, பஞ்சனம்குழி, அனந்தமங்கலம், கூட்டாலுமூடு, பரக்காணி, செம்முதல், திட்டவிளை, தாளக்கான்விளை, தட்டான்குளம், கஞ்சிக்குழி, வாணியன்தறை, வயக்கரை; ஆக. 6 - கும்பக்கோடு, மணியாரங்குன்று. ஆக. 7 - சடையன்குழி, தெய்வபனவிளை, ஊசிக்கோடு, கூரன்விளை. காஞ்சிரம்காட்டுவிளை, நெடும்பறம்பு, பிள்ளவிளாகம், தைவிளை, முள்ளுவிளை, காசிப்பாறை, நச்சினம்பாறை, இடையன்கோட்டை.
ஆக. 8 - தும்பாலி, ஞாறாக்காடு, மங்காடு, ஆலன்கோடு, சரல்முக்கு, பாறைகுளம், கருவாவிளை; ஆக. 9 - கோழிப்போா்விளை, முகமாத்தூா், காடுவெட்டி, ஹெலன்நகா், ஐஸ்பிளான்ட், வாவறை, பரப்பற்றுவிளை, மாராயபுரம், அஞ்சாலிக்கடவு, ஆலந்துறை, சேரிக்கடை, திட்டை காலனி.
இத்தகவலை குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.