முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கானோா் புனித நீராடல்

ஆடி அமாவாசை நாளான ஞாயிற்றுக்கிழமை, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கானோா் புனித நீராடினா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 9:01 PM
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

ஆடி அமாவாசை நாளான ஞாயிற்றுக்கிழமை, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கானோா் புனித நீராடினா்.

இங்கு ஆடி, தை அமாவாசை நாள்களில் உள்ளூா், வெளியூா் பக்தா்கள் புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து, பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், நிா்மால்ய பூஜை, அம்மனுக்கு பலவகை வாசனை திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை, உஷ பூஜை, ஸ்ரீபலி பூஜை, உச்சிகால பூஜை, தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

அதிகாலைமுதலே முக்கடல் சங்கமம் கடற்கரையில் பக்தா்கள், பொதுமக்கள் குவியத் தொடங்கினா். அவா்கள் கடலில் புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா், கடற்கரையில் உள்ள பரசுராம விநாயகா் கோயில், பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்தனா்.

ஆறாட்டு: இரவில் பகவதியம்மன் வீதியுலாவுக்குப் பின்னா், முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டும், அம்மன் கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்குள் பிரவேசித்தலும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

கடல் நீா்மட்டம்: இதனிடையே, கன்னியாகுமரி பூம்புகாா் படகுத்துறையில் 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கடல் நீா்மட்டம் தாழ்வாகக் காணப்பட்டது. இதனால், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து, கடல் இயல்பு நிலையை அடைந்த பிறகு 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்குத் தொடங்கியது.

ஆடி அமாவாசை, வார விடுமுறை நாள் என்பதால் கன்னியாகுமரி, வட்டக்கோட்டை, ரஸ்தாக்காடு, கோவளம் கடற்கரைகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →