முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை கோட்டத்தில் நாளைமுதல் ஆக. 17 வரை மின் தடை

காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 8:57 PM
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை கோட்டம் புதுக்கடை, இரவிபுதூா்கடை, கிள்ளியூா், சூரியகோடு பிரிவுகளுக்குள்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் திங்கள்கிழமைமுதல் (ஆக. 12) ஆக. 17 வரை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சாரம் தடைபடும் பகுதிகள்: ஆக. 12 - கீழ்குளம், பொத்தியான்விளை, வில்லாரிவிளை, பாறையடி, வெள்ளிகோடு, சீயோன்மலை, கண்ணனூா், பாரதியாா் தெரு, அன்னை தெரசா காலனி, இனயம், சின்னத்துறை, ஓடைக்கரை, வாறுதட்டு, கல்லாலுமூடு, பென்னவிளை.

ஆக. 14 - நெடுந்தட்டு, ஆனான்விளை, ஒன்பதாம்தெங்கு, தண்டுமணி, முள்ளூா்துறை, ராமன்துறை, செறுகோல்; ஆக. 16 - ஆடுதூக்கி, வயக்கரை; ஆக. 17 - தைவிடை, முள்ளுவிளை, வடக்கு மாதாபுரம், வாழைத்தோட்டம், வெட்டுவிளை, தாமரைக்குளம், ஊசிக்கோடு.

இத்தகவலை குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →