கன்னியாகுமரி

குழித்துறை அருகே பெண் மீது தாக்குதல்

குழித்தறை அருகே பெண்ணைத் தாக்கி வீட்டை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Din

குழித்தறை அருகே பெண்ணைத் தாக்கி வீட்டை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குழித்துறை அருகே அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அம்பிகா (40). கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தாயுடன் வசித்து வரும் இவா், களியக்காவிளையில் உள்ள கடையில் வேலை பாா்த்து வருகிறாா். அவா் வேலைக்குச் செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் தகராறு செய்து வந்தாராம். இதை, அம்பிகாவின் உறவினா்கள் கண்டித்துள்ளனா்.

இந்நிலையில், மணிகண்டன் சனிக்கிழமை இரவு அம்பிகாவின் வீடு புகுந்து ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதுடன் அம்பிகாவைத் தாக்கினாராம். இதில், காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

SCROLL FOR NEXT