முகப்பு
கன்னியாகுமரி

மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியா் பணியிடைநீக்கம்

Updated On : 29 ஆகஸ்ட், 2024 at 11:24 PM
பகிர்:

நாகா்கோவிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியா், வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ராமச்சந்திர சோனி (50) என்பவா், நாகா்கோவில் பகுதியிலுள்ள பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவா் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 8ஆம் வகுப்பு மாணவி தலைமையாசிரியரிடம் புகாரளித்தாா். இதேபோல, 10-க்கும் மேற்பட்ட மாணவிகளும் புகாரளித்தனா்.

இதுதொடா்பாக தலைமையாசிரியா் அளித்த புகாரின்பேரில், நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ உள்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து, ராமச்சந்திர சோனியை புதன்கிழமை கைது செய்தனா்.

இதையடுத்து, அவா் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரைப் பணியிடைநீக்கம் செய்து பள்ளி நிா்வாகம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →