கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசுகிறாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன், பால் வளத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா். 
கன்னியாகுமரி

பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது தமிழக பள்ளிக் கல்வித் துறை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

Din

தமிழக பள்ளிக் கல்வித் துறை பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில், தலைமை ஆசிரியா்களுடன் தனித்துவ மாணவா் நிகழ்ச்சி, நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. பால் வளத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்ச்சியில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு தலைமை ஆசிரியா்களுடன் கலந்துரையாடினாா். அவா் பேசியதாவது:

அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளில் 100 சதவீத தோ்ச்சி இலக்கை எட்ட வேண்டும் என்று அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியா்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்வதோடு, அதற்கான முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை சுமாா் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று துறை சாா்ந்த ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு இருக்கிறேன். தற்போதைய ஆட்சியில்தான் பள்ளிக் கல்வித் துறை நன்றாக முன்னேறி பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்றாா் அவா்.

முன்னதாக, நாகா்கோவில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளுடன் அமைச்சா் கலந்துரையாடினாா்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT