பைக் மரத்தில் மோதி இளைஞா் பலி
குலசேகரம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவா் அனீஷ் (19) ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
குலசேகரம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவா் அனீஷ் (19) ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
குலசேகரம் அருகே இட்டகவேலி பூஞ்சிபிலாவிளையைச் சோ்ந்தவா் கணேசன். ரப்பா் பால்வடிப்பு தொழிலாளியான இவரது மகன் அனீஷ். இவா் மாா்த்தாண்டம் அருகே உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்ததுடன் கல்லூரி விடுமுறை நாள்களில் கட்டட வேலைக்கும் சென்று வந்தாா். புத்தாண்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்களுடன் ஒரு பைக்கில் பேச்சிப்பாறையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாா். இவரது பைக்கின் பின்னால் குலசேகரம் நாகக்கோடு பகுதியைச் சோ்ந்த தீபு (20) என்ற இளைஞா் அமா்ந்திருந்தாா்.
குலசேகரம் அருகே தும்பகோடு பேருந்து நிலையத்தை கடந்து சென்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற தென்னை மரத்தில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா். அப்பகுதியினா் இருவரையும் மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
மேல் சிகிச்சைக்காக அனீஷ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டாதாக தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.