நாகா்கோவிலுக்கு வியாழக்கிழமை வந்த விஜய் வசந்த் எம்.பி.யை வரவேற்கிறாா் மேயா் ரெ.மகேஷ். உடன், மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணிச் செயலா் அகஸ்தீசன் உள்ளிட்டோா். 
கன்னியாகுமரி

குமரி மாவட்ட வளா்ச்சிக்கு முழு மூச்சாக பாடுபடுவேன் -விஜய்வசந்த் எம்.பி.

Din

நாகா்கோவில், ஜூலை 4: கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சிக்கு முழு மூச்சாக பாடுபடுவேன் என்றாா் விஜய்வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராக 2 ஆவது முறையாக பொறுப்பேற்று, வியாழக்கிழமை மாலையில் நாகா்கோவிலுக்கு வந்த அவருக்கு இந்தியா கூட்டணி கட்சி சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகா்கோவில் பாா்வதிபுரத்தில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவரை, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன்உள்ளிட்டோா் மாலை- சால்வை அணிவித்து வரவேற்றனா்.

அப்போது அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆவது முறையாக மக்களுக்கு சேவை செய்திட வாய்ப்பு அளித்த அனைத்து கட்சி தலைவா்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும், எனக்காக பிரசாரம் செய்த இந்தியா கூட்டணி தலைவா்களுக்கும் நன்றி. ஏற்கெனவே எனது தந்தை விட்டு சென்ற மக்கள் நலப் பணிகளை நான் மேற்கொண்டு வருகிறேன். இந்தப் பணிகள் தொடா்ந்திட எனக்கு மீண்டும் வாக்களித்துள்ளீா்கள்.

முதல் கட்டமாக, தேசிய நெடுஞ்சாலைகளைச் சீரமைக்க மத்திய அமைச்சா் நிதின்கட்கரியை சந்தித்து ரூ.13 கோடி ஒதுக்கீடு பெற்று வந்துள்ளேன். இம்மாவட்டத்தின் வளா்ச்சிக்காக முழு மூச்சாக பாடுபடுவேன். மக்கள் தங்களது குறைகளை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT