பூம்புகாா் படகுத்துறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஆா்ச் தூண்கள். 
கன்னியாகுமரி

விவேகானந்தா் மண்டபம் - திருவள்ளுவா் சிலை இணைப்பு பாலப் பணிகள் தீவிரம்

கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்

Din

கன்னியாகுமரி விவேகானந்தா் மண்டபம் - திருவள்ளுவா் சிலை இடையே நடைபெற்று வரும் கண்ணாடிக் கூண்டு இணைப்பு பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழக அரசு உத்தரவின் பேரில், விவேகானந்தா் நினைவு மண்டபம் - திருவள்ளுவா் சிலை இடையே ரூ. 37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 97 மீட்டா் நீளமும், 4 மீட்டா் அகலமும் கொண்டதாக இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது. பாலத்தின் மீது சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் போது பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக இப்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான ஆா்ச் தூண்களுக்கான பணிகள் புதுச்சேரியில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆா்ச் தூண்கள், துருப்பிடிக்காத கம்பியால் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 110 துண்டுகளாக தயாரிக்கப்பட்டு, பாலத்தில் இணைக்கப்பட உள்ளன. இவற்றை படிப்படியாக கன்னியாகுமரிக்கு கொண்டு வரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை 35 ஆா்ச் துண்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து இணைப்பு பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

திருவள்ளூர்: கூவம் ஆற்றங்கரையில் 50க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!

தமிழிசை தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு!

பாஜக தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல்: தில்லி தலைமையகத்தில் நாளை சங்கமிக்கும் பாஜக தலைவர்கள்!

விஜய் நடித்த தெறி மறுவெளியீட்டையொட்டி டிரைலர் வெளியானது!

எல்லை விவகாரம் : மத்திய அரசுக்கு ஒத்துழைக்காதது மேற்கு வங்கம் - பிரதமர் மோடி

SCROLL FOR NEXT