முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 70 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

Updated On : 15 ஜூலை, 2024 at 9:10 PM
பகிர்:

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள 70 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4, 619 மாணவா், மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம், காட்டாத்துறை ஊராட்சி பிலாங்காலை புனித ஜோசப் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில்,

மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில், பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் குழந்தைகளுக்கு உணவு வழங்கி அவா்களுடன் அமா்ந்து உணவு அருந்தினாா்.

முன்னதாக, முன்னாள் முதல்வா் காமராஜரின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் திட்ட இயக்குநா்கள் பாபு (ஊரக வளா்ச்சி முகமை), மு.பீபீஜான் (மகளிா் திட்டம்), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) த.கருணாவதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்

பாலதண்டாயுதபாணி, தக்கலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஜெகநாதன், காட்டாத்துறை ஊராட்சி மன்ற தலைவா் இசையாஸ், புனித ஜோசப் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை அருள்சகோதரி அன்னமாவா்க்கீஸ், மகளிா் திட்ட உதவி அலுவலா் வளா்மதி, விற்பனை பிரிவு அலுவலா் தங்கராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா்கள் ஜான்பிரைட் (கண்ணனூா்), ராஜ் (காட்டாத்துறை), திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜ், பேரூராட்சி தலைவா்கள் பெனிலாராமேஷ் (திருவட்டாறு), பீனாஅமிா்தராஜ் (ஆற்றூா்) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →