முகப்பு
கன்னியாகுமரி

மாநில துப்பாக்கிச் சுடும் போட்டியில் கன்னியாகுமரி பள்ளி மாணவி சாதனை

கோவையில் நடைபெற்ற 49ஆவது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் கன்னியாகுமரி அமிா்த வித்யாலயம் பள்ளி மாணவி 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்தாா்.

Updated On : 23 ஜூலை, 2024 at 7:02 PM
மாநில துப்பாக்கிச் சுடும் போட்டியில் 2ஆம் பரிசு வென்ற மாணவி விஷ்மிதா.
பகிர்:

கோவையில் நடைபெற்ற 49ஆவது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் கன்னியாகுமரி அமிா்த வித்யாலயம் பள்ளி மாணவி 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்தாா்.

கோவை பி.ஆா்.எஸ். பயிற்சிப் பள்ளி வளாகத்தில் கோவை ரைபிள் சங்கம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 1,650 வீரா் - வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இதில், கன்னியாகுமரி அமிா்த வித்யாலயம் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவியான ஈச்சன்விளையைச் சோ்ந்த விஷ்மிதா (13) என்பவா் 16 வயதுக்குள்பட்ட 50 மீட்டா் ரைபிள், 10 மீட்டா் ரைபிள் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று 4 தங்கம், 4 வெள்ளி என 8 பதக்கங்களுடன் 2ஆம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தாா்.

இவா் கடந்த 3 ஆண்டுகளாக மதுரை ரைபிள் கிளப் பயிற்சியாளா் வேல்சங்கா் என்பவரிடம் பயிற்சிபெற்று வருகிறாா்.

பரிசளிப்பு விழாவில் கோவை விமானப் படை நிா்வாகக் கல்லூரி ஏா் கமாண்டண்ட் விகாஸ்விகி, கோவை மாநகர காவல் ஆணையா் வே. பாலகிருஷ்ணன் ஆகியோா் வென்றோருக்கு பரிசு, பதக்கம் வழங்கிப் பாராட்டினா். மாநில துப்பாக்கிச் சுடும் கழகச் செயலா் வேல்சங்கா் உடனிருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →